சுகா மீடியேட்டர்ஸ் திட்ட செயல்முறை

சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் ஒரு சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மத்தியில், தமது நிறுவனத்தின் அங்கீகாரம் செய்யப்பட்ட விற்பனை முகவர்கள் மூலம் எவ்வாறு செயல்படுத்தபடுகிறது என்பதை விளக்கும் படம்

சுகா மீடியேட்டர்ஸ் நிறுவன பணிகளின் வடிவம்

Suga Mediators Project Process chart

 

இந்த திட்ட செயல்முறையை டவுண்லோட் அல்லது பிரிண்ட் செய்ய   இங்கே கிளிக் செயலாம்

சுகா மீடியடோர்ஸ் திட்ட செயல்முறை விளக்கம்

புரோக்கர் / முகவர் அங்கீகாரம்:

வீடு நிலம் மனை தொழிற்சாலைகள் போன்ற சொத்துக்களை வியாபார முறையில் செய்துவரும் புரோக்கர்கள் நமது சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து அங்கீகார சான்றிதழ் பெறும்போது முகவராக ஏற்கப்படுகிறார் .

எந்த ஒரு சொத்து வியாபார பரிவர்தனை நடைபெற்றாலும், விற்பவர் பக்கம் மற்றும் வாங்குபவர்கள் பக்கம் பலவித முகவர்கள் இருப்பார்கள் .  நமது நிறுவனத்திற்கு பலவழிகளில் சொத்துகளை விற்கவும் வாங்கவும் கோரிக்கைகள் வந்தாலும், முகவர் வழி சொத்துவியாபாரம் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும்.

ஒரு சொத்தை விற்கும் ஒரு நபர் அந்த பகுதி முகவர்களையோ அல்லது தெரிந்த முகவர்களையோ அணுகும்போது அந்த சொத்து சார்பு தகவல்களை பெறுகின்றனர். அவருக்கு சொத்தை வாங்கும் நபர்களோடு பரிச்சயம் இருக்க வாய்புகள் குறைவு.

இந்த சூழல் ஏற்படும்போது தவறான தகவல் அல்லது தவறான வாங்கும் நபர்களை சந்திக்க நேரிடும்.

அதேபோல் சொத்துக்களை வாங்கும் ஒரு நபர் அவர் பகுதி முகவர்களை அணுகும்போது அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் அல்லது ஆவண குறைபாடுள்ள சொத்துக்களை வாங்கும் சூழல் கூட ஏற்படுகிறது.

இதுபோன்ற வியாபாரங்களில் பல புரோக்கர்கள் தமக்கு கிடைக்கவேண்டிய கமிஷன் தொகை கூட வாங்க இயலாமல் போகிறது.

சொத்து சார்பு வியாபார  பரிவர்தனைகளில் சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் சிறந்த சேவையை சட்டபூர்வமாக வழங்குகிறது. அது எவ்வாறு என்று மேலே விளக்க படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு

சுகா மீடியேட்டர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு சொத்தை விற்கவோ வாங்கவோ ஒருவர் அணுகும்போது சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் தனது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலம் சொத்து விற்பவர்களையோ வாங்குபவர்களையோ நேரடி அமர்வு மூலம் சந்திக்கிறது. பின் அதுசார்பு சேவைகளை உறுதிசெய்தபின் இருதரப்பு குழுவையும் நேரடி அமர்வு செய்து வியாபாரத்தை சிறப்பாக செய்து முடிக்கிறது .

விற்பவர் அல்லது விற்கும் நிறுவனங்களை சந்திக்கும்போது

குறைந்த மார்க்கெட் மதிப்பு கொண்ட குறைந்த நிலப்பரப்பை கொண்ட சொத்துக்களை விற்க்கும்போது மூல பத்திரம், கிரைய பத்திரம், வழக்கறிஞர் கொடுக்கும் சட்ட கருத்து என்ற லீகல் ஒபீனியன், வில்லங்க சான்றிதல், விற்பவர் விற்க்கும் சொத்தின் மேல் எந்த வித வங்கி கடனும், அல்லது தனியார் கடனும் இல்லை என்பதை உறுதி செய்தல் போன்றவை போதுமானது. அதுவே அதிக மதிப்பு உள்ள சொத்துக்களையும் அதிக பரப்பளவு கொண்ட சொத்துக்களையும் ஒரு நபர் விற்கிறார் என்றால் ஆடிட்டரின் தணிக்கை அறிக்கையும், கடந்த ஆண்டு வருமான வரி சமர்பித்த சான்றும் முக்கியமானது. இப்போது ஒரு விற்பனை பக்கம் சுகா மீடியேட்டர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.

  • விற்பவர் பக்கம் விற்பவர்களின் தகவல்கள் பெற்றுள்ள முகவர் மற்றும் அவர் தொடர்பில் குறிப்பிட்ட சொத்தில் முகமை செய்யும் மற்ற புரோக்கர்களை முதலில் ஒரு அமர்வு கொண்டு ஆவண நகல்களை சரிபார்த்து, அந்த வியாபாரத்தில் எந்த எந்த முகவர் பங்கு பெற உள்ளார் என்பதை சுகா மீடியேட்டர்ஸ் முதலில் உறுதி செய்து கொள்ளும்
  • அவ்வாறு நேரடி அமர்வில் சந்திக்கும்போது சொத்து சார்பு ஆவணங்களை விற்பவர் பக்கம் சரிபார்த்து பெற்றுக்கொண்டு விற்பவரின் கோரிக்கை சார்ந்த அனுமதி கடிதத்தை முறையாக பெற்று கொள்கிறது.
  • அதன்பின் வாங்கு நபர் ஆவணங்களை சரிபார்த்து உறுதி ஆனதும் சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் தனது நிறுவன பெயரில் விற்பவர் பக்கம் உள்ள நமது நிறுவன அங்கீகாரம் பெற்ற அனைத்து முகவர்களுக்கும் சேர்த்து கமிஷன் ஒப்பந்த பத்திரம் தயாரித்து விற்பனை செய்பவரிடம் கையொப்பம் பெறுகிறது. ஒருவேளை விற்பனை செய்யக்கூடிய சொத்து மதிப்பு ஐந்து கோடிக்கு மேலே இருந்தால் கமிஷன் ஒப்பந்த பத்திரத்தை நமது நிறுவனம் நேரடியாக பதிவுதுறையில் பதிவு செய்து விடும் .
  • அதிக அளவு முதலீடு அல்லது மதிப்பீடு சொத்துக்களை வாங்குபவருக்கு நிதி இருப்பு சான்று இருப்பினும் ரிசர்வ் வங்கி அறிவுறுதல்படி அவர் பண பரிமாற்றம் செய்ய அனுமதி உள்ளதா என உறுதி செய்தபின்பு  அவர்களின் கடைசி வருமான வரி தாக்கல் படிவங்கள் மற்றும் நிதியோட்ட அறிக்கை போன்றவை ஆராய்ந்து,  வாங்குபவர் பக்க பிற ஆவணங்கள் சரிபார்த்து  சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் நமது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கும் சேர்த்து கமிஷன் ஒப்பந்த பத்திரம் கையொப்பம் பெரும். சில  குறைவான விலை மதிப்பீடு உள்ள சொத்துக்களை வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி தேவை இருக்காது
  • மேற்படி நடைமுறைகள் முடிந்தால் மட்டுமே வாங்குபவர் விற்பவர் இருவருக்கும் நேரடி அமர்வு ஏற்பாடு செய்து தரப்படும். அப்போது விலை சார்பு பேச்சுகள் உறுதியானால் விற்பனை நடைமுறை முழுமை பெரும் என்பதால் நமது நிறுவன கமிஷன் தொகையை சொத்து பதிவுத்துறை மூலம் கைமாறுவதற்க்கு முன்பு முறைப்படி சுகா மீடியேட்டர் வங்கி கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும் .  அதன் பின் முழுமையாக சட்டரீதியாக சொத்து கைமாறும் வரை சுகா மீடியேட்டர்ஸ் இரு தரப்பினருடனும் அலுவல் ரீதியான சேவைகள் மற்றும் ஒத்துழைப்புகள் செய்யும் .
  • மேலே கூறிய கமிஷன் தொகை சுகா மீடியேட்டர்ஸ் நிறுவன வங்கிக்கு வந்து சேர்ந்து இருந்தாலும்,  இருதரப்பினருடைய பதிவு துறை சொத்து மாற்றம் நடைபெற்ற பின்பு மட்டுமே அத்தகைய கமிஷன் தொகை விற்பவர்கள் சார்பு முகவர்களுக்கு பிரித்து தரப்படும் . எவ்வாறு பிரித்து தரப்படும் என்பதை கமிஷன் விபரம்  கமிஷன் விபரம் என்ற பக்கத்தில் காணலாம்.
  • இதனால் ஒவ்வொரு முகவருக்கும் சட்ட ரீதியான சுத்தமான கமிஷன் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவ்வாறு வரவு வைக்கப்பட தொகைக்கு உண்டான ஆதாரபூர்வ பண பரிவர்தனை ஆவணங்களும் கொடுக்கப்படும்.  இதன் மூலம் உண்மையான உழைப்புக்கு உரித்தான வருமானம் கிடைக்கிறது.

`

வாங்குபவர் அல்லது வாங்கும் நிறுவனங்களை சந்திக்கும்போது?

பொதுவாக ஒரு சில லட்ச ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கும்போது குறைந்த அளவு ஆவணங்கள் இருந்தால் போதுமானது. அதாவது வாங்குபவர்க்கு வாங்கும் திறன், வங்கி மூலம் வாங்குபவர் எனில் அதற்க்கு உண்டான ஆதாரம் மற்றும் கடந்த நிதியாண்டு வருமான வரி சமர்பித்ததற்க்கு உண்டான ஆவணங்கள் போன்றவை போதுமானது. ஆனால் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதானால் ரிசர்வ் வங்கியின் சிறப்பு அனுமதி பண பரிமாற்றத்திற்கு தேவைப்படுகிறது. இது வாங்குபவர் தனது தணிக்கையாளர் மூலம் பெற்று இருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும் . இப்போது வாங்குபவர் பக்கம் சுகா மீடியேட்டரஸ் எவ்வாறு சேவை செய்கிறது என்று பார்ப்போம்.

  • வாங்குபவர் பக்கம் வாங்குபவரின்  தகவல்கள் பெற்றுள்ள முகவர் மற்றும் அவர் தொடர்பில் முகமை செய்யும் மற்ற புரோக்கர்களை முதலில் ஒரு அமர்வு கொண்டு வாங்குபவரின் நிதி நிலை ஆவண நகல்களை சரிபார்த்து, அந்த வியாபாரத்தில் எந்த எந்த முகவர் வாங்குபவர் சார்பாக பங்கு பெற உள்ளார் என்பதை சுகா மீடியேட்டர்ஸ் முதலில் உறுதி செய்து கொள்ளும்
  • அவ்வாறு நேரடி அமர்வில் சந்திக்கும்போது நிதி நிலை ஆவணங்களை வாங்குபவர் பக்கம் சரிபார்த்து பெற்றுக்கொண்டு வாங்குபவரின் முதலீட்டு விருப்பம் சார்ந்த கோரிக்கை கடிதத்தை முறையாக பெற்று கொள்கிறது.
  • அதன்பின் விற்கபடவுள்ள சொத்து  ஆவணங்களை சரிபார்த்து உறுதி ஆனதும் சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் தனது நிறுவன பெயரில் வாங்குபவர்கள் பக்கம் உள்ள நமது நிறுவன அங்கீகாரம் பெற்ற அனைத்து முகவர்களுக்கும் சேர்த்து கமிஷன் ஒப்பந்த பத்திரம் தயாரித்து வாங்கவுள்ள நபர் அல்லது வாங்கவுள்ள நிறுவனத்திடம்  கையொப்பம் பெறுகிறது. ஒருவேளை வாங்க கூடிய சொத்து மார்க்கெட் மதிப்பு ஐந்து கோடிக்கு மேலே இருந்தால் கமிஷன் ஒப்பந்த பத்திரத்தை நமது நிறுவனம் நேரடியாக பதிவுதுறையில் பதிவு செய்து விடும் .
  • அதிக மதிப்பு உள்ள சொத்துக்களையும் அதிக பரப்பளவு கொண்ட சொத்துக்களையும் ஒரு நபர் விற்பனை செய்கிறார் என்றால் ஆடிட்டரின் தணிக்கை அறிக்கையும், கடந்த ஆண்டு வருமான வரி சமர்பித்த சான்றும் முக்கியமானது. இவற்றை எல்லாம் உறுதி செய்தபின்பு மட்டுமே  சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனம் நமது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கும் சேர்த்து வாங்குபவர் அல்லது வாங்கும் நிறுவனத்துடன் கமிஷன் ஒப்பந்த பத்திரம் கையொப்பம் பெரும். சில  குறைவான விலை மதிப்பீடு உள்ள சொத்துக்களை வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி தேவை இருக்காது
  • இந்த நடைமுறைகள் முடிந்த பின்பு வாங்குபவர் விற்பவர் இருவருக்கும் நேரடி அமர்வு ஏற்பாடு செய்யப்படும்.  அதில் விலை சார்பு பேச்சுகள் உறுதியானால் விற்பனை நடைமுறை முழுமை பெரும் என்பதால் நமது நிறுவன கமிஷன் தொகையை சொத்து பதிவுத்துறை மூலம் கைமாறுவதற்க்கு முன்பு முறைப்படி சுகா மீடியேட்டர் வங்கி கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்படும் .  அதன் பின் முழுமையாக சட்டரீதியாக பத்திர பதிவுகள் முடிந்து சொத்து கைமாறும் வரை சுகா மீடியேட்டர்ஸ் இரு தரப்பினருடனும் அலுவல் ரீதியான சேவைகள் மற்றும் ஒத்துழைப்புகள் செய்யும் .
  • மேலே கூறிய கமிஷன் தொகை சுகா மீடியேட்டர்ஸ் நிறுவன வங்கிக்கு வந்து இருந்தாலும்,  இருதரப்பினருடைய பதிவு துறை சொத்து மாற்றம் அலுவல் ரீதியாக முடிந்த பின்பு  மட்டுமே கிடைத்த கமிஷன் தொகை வாங்குபவர்கள் சார்பு முகவர்களுக்கு பிரித்து தரப்படும் . எவ்வாறு பிரித்து தரப்படும் என்பதை கமிஷன் விபரம்  கமிஷன் விபரம் என்ற பக்கத்தில் காணலாம்.
  • இதனால் ஒவ்வொரு சொத்து வாங்குபவர் பக்கம் உள்ள நமது அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கும் சட்ட ரீதியான சுத்தமான கமிஷன் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவ்வாறு வரவு வைக்கப்பட தொகைக்கு உண்டான ஆதாரபூர்வ பண பரிவர்தனை ஆவணங்களும் கொடுக்கப்படும்.  இதன் மூலம் உண்மையான உழைப்புக்கு உரித்தான வருமானம் கிடைக்கிறது.

 

விற்பவர்களோ வாங்குபவர்களோ சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் வியாபாரம் மேற்கொள்ளவில்லை என்றால் ஒப்புக்கொண்ட ஏதேனும் ஒருபக்கம் உள்ள முகவர்களுக்கு மட்டும் முன்கூறிய சேவை அடிப்படையில் உண்டான கமிஷன் தொகையை ஒப்பந்தம் மூலம் பெற்று கமிஷன் விபர பக்கத்தில் உள்ளபடி பிரித்து கொடுக்கப்படும். ஆனால் எந்த பக்கம் நமது நிறுவனத்தோடு வியாபாரம் மேற்கொள்ளவில்லையோ அந்த பக்க ஆவணங்களையும் சொத்துக்களையும் நம்பகத்தன்மை உறுதி செய்ய அந்த பக்க முகவர்கள் பொறுப்பாவார்கள்.  இது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் வெற்றிபெறுவது இல்லை. கடைசி வரை பேசி பேசியே கால விரையமும் பொருள் விரையமும் முகவர்களுக்கு அலைச்சலும் மட்டுமே மிஞ்சும்   என்பது சுகா மீடியேட்டர்ஸ் நிறுவன கணிப்பு .