புரோக்கர் அல்லது முகவர் சார்பு ஆவண தேவைகள்
சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் முகவராக சொத்துக்கள் வாங்குபவர் பக்கம் அல்லது விற்பவர்கள் பக்கம் செயல்படும் புரோக்கர்கள் பதிவு செய்து அங்கீகாரம் பெறலாம் . அதற்க்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு.
- முதலில் நீங்கள் ஆன்லைன் மூலம் புரோக்கர் பதிவை செய்து கொள்ளவேண்டும் . அவ்வாறு பதிவு செய்வதற்க்கு முன்பு முகப்பு மற்றும் கமிஷன் விபரம் என்ற முந்தைய இரண்டு பக்கங்களை இணைய பக்கங்கள் பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். பதிவு செய்யும் முன்பு உங்கள் அடையாள அட்டை மற்றும் பான் கார்ட் அட்டை நகல் புகைப்படமாக ஸ்கேன் செய்து வைத்து அப்லோட் செய்ய வேண்டி இருக்கும். தெளிவில்லாத ஸ்கேன் காப்பி அப்லோட் செய்தால் அங்கீகாரம் பெற இயலாது.
- அதன் பின் எழுத்து வடிவில் நீங்கள் முகவராக சேர விருப்ப விண்ணப்ப கடிதத்தினை எழுதி அல்லது டைப் செய்து சுகா மீடியேட்டர்ஸ் அலுவலகத்திற்க்கு அனுப்ப வேண்டும். விருப்ப விண்ணப்ப கடித மடல் இங்கு உள்ளது. இதை டவுண்லோட் செய்து நிரப்பி தெளிவாக கையொப்பம் இட்டு அனுப்பி வைக்க வேண்டும் . அவ்வாறு அனுப்பும்போது உங்கள் அடையாள அட்டை நகல் மற்றும் பான் கார்டு நகல் ஜெராக்ஸ் எடுத்து அந்த ஜெராக்ஸ் நகலில் பால்பென் பேனா கொண்டு கையொப்பம் இட்டு கடிதத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் . நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இந்த பக்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
- அவ்வாறு நீங்கள் அனுப்பிய விண்ணப்பம் எங்கள் அலுவலகத்தில் சரிபார்த்தபின்பு சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு ஐடி ஒதுக்கப்ப்ட்டு அங்கீகார சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.
- உங்களுக்கு ஏற்ற அல்லது உங்களால் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு வியாபார திட்டத்திலும், அல்லது ஒவ்வொரு விற்பனை செயலக்கத்திலும் உங்க ஐடி கொண்டு உங்களுக்கு அறிவுறுத்தப்படும். அப்போது சுகா மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட வியாபாரத்தில் கலந்து கொண்டு பணியாற்ற உங்களுக்கு கமிஷன் ஒப்பந்த பத்திரம் அனுப்பப்படும் அதில் கையொப்பம் இட்டு எமது அலுவலக நிர்வாகியிடம் சமர்பித்தபின்பு மட்டுமே அந்த வியாபாரத்திற்க்கு உண்டான கமிஷன் தொகை கிடைக்கும் . கமிஷன் விபரங்களை இங்கு படித்து அறிந்து கொள்க.
விருப்ப விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
சுகா ரியல்எஸ்டேட் மீடியேட்டர்ஸ்
தபால் பெட்டி எண்: 2
பல்லடம் அஞ்சல் – 641664
தமிழ்நாடு , இந்தியா
நல்ல கவரில் சாதாரண தபாலில் விருப்ப கடிததுடன் பான் மற்றும் அடையாள அட்டை ஜெராக்ஸ் சேர்த்து அனுப்பி வைக்கவும் . – இவண் நிர்வாகம்