வீடு மனை நில ரியல்எஸ்டேட் புரோக்கர் பதிவு
நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் வீடு மனை நில ரியல்எஸ்டேட் புரோக்கர் என்றால் சுகா ரியல் எஸ்டேட் மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் இணைந்து பயனடையலாம் .
ரியல் எஸ்டேட் துறையில் இருவகையான புரோக்கர் பணிகள் உள்ளது. சொத்துக்களை வாங்குபவர்கள் பக்கம் உள்ள புரோக்கர் மற்றும் சொத்துக்களை விற்பவர் பக்கம் உள்ள புரோக்கர்.
நமது சுகா ரியல் எஸ்டேட் மீடியேட்டர்ஸ் நிறுவனத்தில் மேற்படி புரோக்கர்கள் இணைந்து பல வழிகளில் பயனடையலாம்.
சுகா மீடியேட்டர்ஸ் புரோக்கர் பதிவுக்கு கீழ்கண்ட விதிகள் மற்றும் அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்
- 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- அரசு பணியில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்
- கட்டாயம் பான் கார்ட் அட்டை வைத்து இருக்க வேண்டும்.
- வங்கி கணக்கு கட்டாயம் இருத்தல் வேண்டும்.
- அடையாள அட்டைகளான வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது ஆதார் அட்டை இதில் ஏதேனும் ஒன்று சமர்பிக்க வேண்டி இருக்கும்.
- நீங்கள் விற்பவர் பக்கம் புரோக்கர் ஆக இருந்தாலும் வாங்குபவர் பக்கம் புரோக்கர் ஆக இருந்தாலும் நமது நிறுவனம் மூலம் உங்களுக்கு என்று ஒதுக்கப்பட, நீங்கள் முன்னெடுப்பு செய்யும் வியாபாரத்திற்க்கு உண்டான கமிஷன் தொகை அரசு விதிகள் படி TDS வருமான வரி பிடித்தம் செய்து உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப படும். ஆன்லைன் பரிவர்தனை அல்லது வரையோலை பரிவர்தனை அல்லது காசோலை பரிவர்தனை மூலம் மட்டுமே நீங்கள் கமிஷன் பெற முடியும் . ரொக்க பண பரிவர்த்தனை மூலம் கமிஷன் தொகை பெற இயலாது.
- ஒரு புரோக்கர் நமது நிறுவனத்தில் பதிவுசெய்தபின்பு ஆவண சரிபார்ப்பு மற்றும் நிறுவன அங்கீகாரம் பெற்றபின்பு நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு முகவர் அடையாள அட்டை வழங்கப்படும். முகவர் எண் வழங்கப்படும். மாவட்ட வாரியாக பல முகவர்கள் புரோக்கர்கள் சேருகின்றனர் என்பதால் பணி ஒதுக்கீடு சம்பத்தபட்ட மாவட்ட முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- உங்கள் முகவர் எண்ணுக்கு ஒதுக்கப்பட பணிகளுக்கு மட்டுமே நீங்கள் செல்ல இயலும் மேலும் அதற்கு மட்டுமே கமிஷன் கிடைக்கும் .